புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் போகராய் பகுதியில் உள்ள பிச்சித்ராபூர் வனப்பகுதியில், இந்தியாவில் காணப்படாத 5 உராங்குட்டான் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளன. இவை மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படும் உயிரினங்கள் என்பதால், சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் இவை கொண்டு வரப்பட்டிருக்கலாம் என வனத்துறை மந்திரி கணேஷ் ராம் சிங் குந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளார். இதன் சர்வதேச சந்தை மதிப்பு தலா ரூ.25 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு பணியகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்ட விலங்குகள் நந்தன்கானன் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/five-rare-non-native-monkeys-rescued-in-india




