நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அப்பகுதிகள் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வனத்துறையினர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-wanders-in-front-of-a-house-in-gudalur-residents-alarmed-by-cctv-footage




