மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து பெட்ரோல் போட சொல்லியுள்ளனர். பங்க் ஊழியர் திருமுருகன் பெட்ரோல் போட்டு கொண்டிருக்கும்போதே பெரிய கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியவாறு வண்டியிலிருந்து இறங்கிய இருவர் திருமுருகனை மிரட்டி அவரிடமிருக்கும் பணத்தைக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியைடைந்த திருமுருகன் செய்வதறியாது நின்றுள்ளார். அப்போது அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பறித்து கொண்டு சாவகசமாக வண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தச் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய மர்ம தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை: கை, கால்கள் கட்டி, வாயில் துணி அடைத்து இளைஞர் கொலை - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூரம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/sholavandan-35000-snatched-from-petrol-bunk-employee-at-knifepoint-video-goes-viral




