கவுகாத்தி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் திருவனந்தபுரத்தில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 2வது ஒருநாள் போட்டி இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய வெஸ்ட் இண்டீசும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-odi-india-vs-west-indies-clash-tomorrow




