திருப்பூர், கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம்-கரூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை-நாகர் கோவில் (வண்டி எண்.16322) எக்ஸ்பிரஸ் நாளை (சனிக்கிழமை), 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 3-ந்தேதிகளில் (சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை களில்) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை-திண் டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். பாலக்காடு டவுன்-திருச்சி (16844) எக்ஸ்பிரஸ் நாளை, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29-ந்தேதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 3-ந்தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு புகலூரில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும் திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/track-maintenance-work-in-karur-changes-to-train-services




