கடலூர், தலைமைச் செயலாளர் மாற்றம் பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து, முடிவு எடுப்பார் என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார். வக்பு நிறுவனங்களுக்கு சவால் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும், தர்க்காக்களும் உள்ளன. அவற்றிற்கு சொந்தமான சில சொத்துகளை வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்படும் போது, அதை மீட்டெடுப்பதில், சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களுக்கு சவால்கள் ஏற்படுகிறது. சொத்துகளை மீட்டு, வக்பு நிறுவனத்திடம் ஒப்படைத்து வருகிறோம். சட்டசபையில் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) சிறு பான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை நடக்கிறது. இதில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம். மிக முக்கியமாக கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் இருக்கும். தலைமைச்செயலாளர் மாற்றமா? த.வெ.க. அரசின் 100 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. தலைமைச் செயலாளர் தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்டு. தற்போது 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பார்த்த வரையில், அரசு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இருந்தாலும் அவர் பா.ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டார் என்ற கருத்தின் அடிப்படையில், ஒரு சில அரசியல் கட்சிகளால் தகவல் சொல்லப்படுகிறது. தலைமைச் செயலாளர் மாற்றம் பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து, முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-chief-secretary-be-changed-minister-shahjahan-responds




