சென்னை, தொடர் விடுமுறை முன்னிட்டு போக்குவரத்து துறையால் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 12.09.2026, 13.09.2026 மற்றும் 14.09.2026 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு. அவர்களின் பயணம் சிரமமின்றி அமையும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய விரிவான முன்னேற்பாடுகள் தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் 09.09.2026 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,099 பேருந்துகளுடன், கூடுதலாக 1.255 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2.351 பேருந்துகள் இயக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் அதன்படி, 11.09.2026 இரவு, இயக்க உத்தேசிக்கப்பட்ட 2,354 பேருந்துகளில், அன்றைய பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பயணத் தேவையின் அடிப்படையில் 2,213 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 141 பேருந்துகளில், 12.09.2026 காலை முதல் பயணிகளின் தேவைக்கேற்ப 41 பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும். தொடர் விடுமுறையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் நடைமுறையில் உள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் 10.09.2026 அன்று அமைக்கப்பட்டு உடனடியாக தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அபராதம் அதன்படி, 10.09.2026 முதல் 12.09.2026 அதிகாலை வரை தமிழ்நாடு முழுவதும் 2,379 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இத்தணிக்கையின் போது, பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் நேரடியாக பயணக் கட்டணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடங்களில், அவ்வாறு வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்பு தணிக்கையின் போது. 400 ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் விளக்கம் கோரி அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விதிமீறல்களுக்காக ரூபாய்: 10.31,500/- இணக்கக் கட்டணம் (அபராதம்) நிர்ணயிக்கப்பட்டு. அதில் ரூபாய்.1,60,500/- உடனடியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூபாய்.15,33,220/- வசூலிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு மேலும், தகுதிச் சான்றிதழ் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 4 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யவும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும். அனுமதி, வரி. தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட விதிமீறல்களை கட்டுப்படுத்தவும். 16.09.2026 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, வாகன உரிமையாளர்களால் ரத்து செய்யப்படும் நேர்வில், அப்பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய அந்த வாகன உரிமையாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஆம்னி பேருந்தின் அனுமதிச்சீட்டின் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும். 10.09.2026 முதல் 16.09.2026 வரை பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் தங்குதடையின்றி இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பொது மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி கண்காணிப்பு அத்துடன், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளை உடனுக்குடன் இயக்குவதற்கும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அந்தந்த பகுதிகளின் பொது மேலாளர்கள். துணை மேலாளர்கள் மற்றும் பணிமனை மேலாளர்கள் பேருந்து நிலையங்களில் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொருட்டு. போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் ஆகியோர் நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து, அதன் விவரங்களை உடனுக்குடன் அளித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பான, சிரமமற்ற மற்றும் தடையற்ற பண்டிகைக்காலப் பயணத்தை உறுதி செய்ய போக்குவரத்துத் துறை சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் போக்குவரத்து துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/extended-holidays-what-arrangements-and-measures-have-been-taken-by-the-transport-department




