திருவண்ணாமலை திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சால்வை அணிவிக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் திருவண்ணாமலை மாநகரம் செங்கம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்களுக்கு இயக்க மறுசீராய்வு நிர்வாகிகள் நியமனம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனை நடைபெற்றது. மோதல் கூட்டத்தில் சால்வை அணிவிக்கும்போது இருவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம், அது இருதரப்பினர் இடையே கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியேறினர் கூட்டத்தில் ஏற்பட்ட இந்த உட்கட்சி பிரச்சனையால் அங்கிருந்து 40-க்கும் மேற்பட்டோர் பாதியிலேயே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/an-argument-broke-out-while-donning-the-shawl-congress-functionaries-took-turns-attacking




