புதுடெல்லி, கல்விக்காக அவர்கள் தொடங்கிய இப்போர், அதோடு நின்றுவிடாது. தேர்தல் சீர்திருத்தங்கள், புல்டோசர் கலாசாரம், மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியலமைப்பை பாதுகாக்கும் புதிய மாற்றத்திற்கும் இது வழிவகுக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். வெற்றித் தொடக்கம் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- இளைஞர்களின் மனவுறுதிக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த 'பெரும் வெற்றி'க்காக உழைத்த ஒவ்வொரு செயல்பாட்டாளருக்கும், அவர்களுக்கு எந்த வகையிலாவது ஆதரவளித்த ஒவ்வொரு தனிமனிதருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தேர்வுகள் மற்றும் கல்விக்கான போராட்டத்தில் இளைஞர்கள் பெற்ற இந்த வெற்றித் தொடக்கம் இனி. * அரசியலமைப்பைக் கையில் ஏந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் வரை மாற்றத்தைக் கொண்டுவரும். * பாஜகவின் தேர்தல் முறைகேடுகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் கேவலமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். * கமிஷன் பெறும் பாஜகவின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும். * சலுகைகள் மற்றும் புகழ்ச்சிப் பாடல்களுக்காக அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்திருக்கும் ஊடகங்களின் சேர்க்கை முடிவுக்குக் கொண்டுவரும். * பாதிக்கப்பட்டவர்கள், துயருறுவோர் மற்றும் அவமானப்படுத்தப்பட்டவர்கள் மீது இனி புல்டோசர்கள் ஏறி இறங்காது. அப்பாவிகள் என்கவுண்டர் (போலி- மோதல்- கொலை) மூலம் கொல்லப்பட மாட்டார்கள் * துயரத்தில் வாடும் ஒரு தாயை இனி யாரும் அவமதிக்க முடியாது. * சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. புதிய சகாப்தம் * விவசாயிகள், தொழிலாளர்கள், கடைக்காரர்கள் அல்லது வணிகர்கள் மீது யாரும் அராஜகத்தை ஏவ முடியாது. * கடவுளையே ஏமாற்றுபவர்கள் மீது இனி யாரும் துளியும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். * மதவாத அரசியலின் சூரியன் இன்றோடு மறையும். * அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளை இனி யாரும் பறிக்க முடியாது. இனி மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு புதிய சகாப்தம் உதயமாகும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/the-sun-of-communal-politics-will-set-today-akhilesh-yadav




