ஜம்மு ஜம்மு-காஷ்மீரில் தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியாகி உள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரில் அக்னூர் பிரிவில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த துப்பாக்கி ஒன்று திடீரென தற்செயலாக வெடித்துள்ளது. ராணுவ மருத்துவமனை இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அக்னூர் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/jammu-and-kashmir-soldier-killed-by-gunshot




