சென்னை, 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பாண்டியராஜன்(எ) ஜான் ஒபெத் (வயது 24) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பாண்டியராஜன் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-schoolgirl-in-chennai-youth-sentenced-to-20-years-in-prison




