புதுடெல்லி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லின் பயணம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஒருநாள் கேப்டன் ரோகித் சர்மாவுக்குப் பின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருநாள் கேப்டன் பொறுப்பை ஏற்ற கில், இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவை வழிநடத்தினார். ஆனால், இந்த தொடரை இந்தியா இழந்தது. விமர்சனங்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்த இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைந்து தொடரை இழந்தது. 3 தொடர்களில் தோல்வி இதைத்தொடர்ந்து, கில்லின் கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் தலைமையில் இந்தியா விளையாடிய 4 ஒருநாள் தொடர்களில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை மட்டுமே வென்றுள்ளது. மற்ற 3 தொடர்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன்களாக முதல் 12 ஒருநாள் போட்டிகளில் அவர்கள் பெற்ற வெற்றி சதவீதம் என்ன என்பதை தற்போது பார்ப்போம். ரோகித் சர்மா- 83.34 சதவீதம் (10 வெற்றி / 2 தோல்வி) விராட் கோலி - 75.00 சதவீதம் (9 வெற்றி / 3 தோல்வி) கே.எல். ராகுல் - 66.67 சதவீதம் (8 வெற்றி / 4 தோல்வி) கபில் தேவ் / சேவாக் - 58.33 சதவீதம்(7 வெற்றி / 5 தோல்வி) சுப்மன் கில் - 50.00 சதவீதம் (6 வெற்றி / 6 தோல்வி) எம்.எஸ். தோனி -41.67 சதவீதம் (5 வெற்றி / 7 தோல்வி) சுனில் கவாஸ்கர் - 25.00 (3 வெற்றி / 9 தோல்வி) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/team-india-these-are-the-worst-captains-in-the-history-of-team-india-where-is-shubman-gills-place




