திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 88 ஆயிரத்து 412 பக்தர்கள் வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 273 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக் கையாக ரூ.5 கோடியே 5 ஆயிரம் வசூலானது. 4.24 லட்சம் திருமலை லட்டுகள் விற்பனையாகின. 2.55 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3,001 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. தற்போது வைகுண் டம் கியூ காம்ப்ளக்சில் 24 காத்திருப்பு அறைகளும் நிரம்பியுள்ளன. எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசன பக்தர்களுக்கு சுமார் 8 மணி நேரம் தரிசனக் காத்திருப்பு நேரமாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/88000-devotees-had-darshan-at-tirupati-in-a-single-day-5-crore-in-offerings-received




