காத்மண்டு, இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் மாயமாகியுள்ளனர். இந்தியா - நேபாளம் எல்லையில் இமயமலை அமைந்துள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பனிச்சரிவு இந்நிலையில், நேபாளத்தில் இருந்து 10 மலையேற்ற வீரர்கள் இமயமலை ஏறியுள்ளனர். நேபாளத்தின் மனங்க் மாவட்டத்தில் இருந்து மலையேற்ற வீரர்கள் 10 பேர் இமயமலை ஏறினர். இமயமலையின் ஹிம்லுங் ஹிமல் சிகரத்தில் மலையேற்ற வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்த கூடாரம் பனியில் புதைந்தது. இதில் மலையேற்ற வீரர்கள் 10 பேரும் மாயமாகினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/nepal-himalayas-avalanche-10-climbers-missing




