சென்னை, ரேஷன் கடைகளில் தரமான அரிசி மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய, மாவட்ட வாரி யாக, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அலுவலர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுக்கள், நேற்று முதல் அனைத்து கிடங்குகளிலும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்து வருகின்றன. தமிழக ரேஷன் கடை களில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு மாதம் தோறும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாதம், 3.75 லட்சம் டன் அரிசி தேவை. இந்த அரிசியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர் பொருள் வாணிப கழகம், அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்கிறது. அவற்றின் வினியோகத்தை, ரேஷன் கடைகள் வாயிலாக கூட்டுறவு துறை மேற் கொள்கிறது. ரேஷன் அரிசி தரம் குறைவாக இருப்பதாக, அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இதற்கு காரணம், 'நீங்கள்தான்' என, இரு துறைகளின் பணியாளர்களும் தங்களுக்குள் மாறி மாறி குறைகளை சொல்கின்றனர். இதுதொடர்பாக இம் மாதம், 20ம் தேதி சட்ட சபையில் கூட்டுறவு மற்றும் உணவு துறை மீதான மானிய கோரிக்கையின் போது, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. 'ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங் கப்படும்' என, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக கூட்டுறவு, உணவு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது. குழுவில், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், வாணிப கழக முது நிலை மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் உள்ளனர். உள்ள வாணிப கழகத்தின் அனைத்து கிடங்கு முதல் மாவட்டங்களில் அக்குழுவினர், நேற்றுகளுக்கும் சென்று, அரிசியின் தரம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு நாளை வரை நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/quality-rice-in-ration-shops-officials-team-inspects




