சென்னை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- பிறந்தநாள் வாழ்த்துகள்! பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், மனவலிமையுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்ற இறைவன் அருள்புரியட்டும். தங்களின் பிறந்தநாள் இனிமையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modis-birthday-premalatha-wishes




