சென்னை, தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ந்தேதி தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “காவிரி உரிமை, மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்கேற்கும். தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நடைபெறும் இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், களப்பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று காவிரிக்கான நமது உரிமைக் குரலை வலுப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-to-protest-against-the-karnataka-government-on-the-3rd-sdpi-announces-it-will-participate




