சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் புகழ் வணக்க பொதுக்கூட்டத்தில் திமுக ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், "சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்ரமணியன் மாதிரி யாரும் செய்ததே கிடையாது. சென்னை சைதாப்பேட்டைக்கு மிகப்பெரிய மருத்துவமனையை மா.சுப்ரமணியன் கொண்டு வந்தார். கலைஞர் முதல்வராக இருந்தப்போதுகூட அந்த இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வர முடியவில்லை. முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர் கட்டிக்கொடுத்த அந்த மருத்துவமனைக்கு சென்ற நோயாளியின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தாலே மா.சுப்ரமணியன் வெற்றி பெற்று இருப்பார். அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது. உயிர் காப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம். இந்த மேடையில்கூட மக்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்பதை அவர் (மா.சுப்ரமணியன்) சொன்னார். இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள். 5 ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். காவிரி விவகாரம்: "தவெக மட்டும் இதை செய்தால், அதுதான் நேஷனல் செய்தி!" - அன்புமணி ராமதாஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/rs-bharathi-lashes-out-at-voters-who-defeated-ma-subramanian



