சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். நிவாரணங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் மற்றும் அவசர நிவாரணங்களை உடனடியாக வழங்க உயர்கல்வித்துறை அமைச்சர் மதுரை மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பேசி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/5-killed-in-road-accident-near-madurai-manickam-thakur-condoles




