இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த பணியிடங்க்ளுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். இது பற்றிய முழு விவரங்கள் வருமாறு; பணி நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி.) காலி பணி இடங்கள்: 545 (தமிழ்நாடு -51) பதவி: லோக்கல் பேங்க் ஆபீசர் (எல்.பி.ஓ.) கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. மேலும், ரிசர்வ் வங்கியின் அட்ட வணையில் இடம்பெற்றுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய ஊரக வங்கியில் கிளார்க் / அதிகாரி பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 1-7-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மொழித்திறன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-8-2026 தேர்வு நடைபெறும் மாதம்: ஆகஸ்டு/செப்டம்பர் கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/education-and-employment/job-in-a-public-sector-bank-preference-for-those-who-know-tamil-apply-immediately




