புதுடெல்லி, அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினவிழா இன்று (ஜூலை 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி வாழ்த்து இந்நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி இந்தியா சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு, 140 கோடி இந்தியர்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக நலன் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ஒரு உத்திசார் கூட்டாண்மையை விட மேலானது. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அளவற்ற ஆற்றல் ஆகியவற்றின் மீதான நமது பொதுவான நம்பிக்கை, நமது நட்பை உலக நலனுக்கான ஒரு உந்துசக்தியாக மாற்றுகிறது. கூட்டாண்மை அடுத்த 250 ஆண்டுகள் அமெரிக்காவிற்கு இன்னும் சிறப்பான செழிப்பு, அமைதி மற்றும் முன்னேற்றத்தை கொண்டுவரட்டும். அத்துடன் இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டாண்மையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. On behalf of 1. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/pm-modi-extends-greetings-on-250th-independence-anniversary-of-america




