சென்னை, மின்வாரிய தலைமையிடத்தில் இருந்து அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் பருவ மழையையொட்டி தடையற்ற மின்சாரத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னதாகவே மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பராமரிப்பு பணி தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக மின்வாரியத்தில் தேவையான பொருட்களை கையிருப்பில் வைக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அதற்கான கொள்முதல் டெண்டரை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/maintenance-work-should-be-completed-quickly-before-the-monsoon-season-electricity-board-instructions




