கவுகாத்தி, அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சஹின் ரஹீம் (வயது 47) என்ற டாக்டர் பணியாற்றி வந்தார். டாக்டர் உயிரிழப்பு இந்நிலையில், டாக்டர் ரஹீம் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார். காலை 7.36 மணிக்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது டாக்டர் ரஹீம் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் டாக்டர் ரஹீமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் ரஹீமை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்பயிற்சி செய்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டாக்டர் ரஹீம் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/video-assam-doctor-47-collapses-during-gym-workout-dies




