சாடின் போவர் கிழக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பறவை இனம் தான் சாடின் போவர். இதில் ஆண் பறவை அடர்ந்த நீல நிற சிறகுகளையும், ஊதா நிற கண்களையும், வெளிர் நிற அலகையும் கொண்டுள்ளது. ஆனால், பெண் பறவையோ ஆலிவ் பச்சை நிற உடலையும், பழுப்பு நிற கண்களையும் கொண்டு, ஆண் பறவையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படும். மேலும், ஆண் சாடின் பௌவர் இந்த தனித்துவமான நீல நிறத்தை பெறுவதற்கு 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். குளிர்ந்த காடுகள் சாடின் போவர் பறவைகள் அதிகமான குளிர்ச்சியை விரும்புவதால், குளிர்ந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளின் அருகிலேயே வாழ்கின்றன. வசந்த காலம்தான் இந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். அந்த நேரத்தில், ஆண் பறவை பெண் பறவையை ஈர்ப்பதற்காக தரையில் குடில் போன்ற கூட்டை கட்டும். அது மற்ற பறவைகளை போல வட்ட வடிவமாக தன் கூட்டை கட்டுவதில்லை. ஊதா நிற பொருள் அலங்காரம் இந்த பறவைகள் தங்கள் கூடுகளை அழகுபடுத்தி கொள்ள குச்சிகளை வைத்து ஒரு ஆர்ச் போன்று கட்டமைக்கும். பல்வேறு பறவைகளின் இறக்கைகள், பல்வேறு விதமான பூக்கள், இலைகள், நீளமான புல், மனிதர்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த வாட்டர் பாட்டில் மூடி, ஸ்ட்ரா, கூழாங்கற்கள் இப்படி பல பொருள்களை சேகரித்து தங்களது கூட்டையும் அழகுற உருவாக்கும். அதிலும் அதிகமாக ஊதா நிற பொருள்களை பயண்படுத்தும். இயற்கை அதிசியமே! அதன்பின்னர் பெண் பறவையை கவர்வதற்காக சுற்றி திரியும். அதேவேளையில் மற்ற ஆண் பறவைகள் இந்த கூட்டை கலைக்க ஆவலாக இருக்கும். அதனால் கூட்டையும் பாதுகாப்பதிலும் அது கவனமாக இருக்குமாம். இயற்கையின் படையில் இதுவும் ஒரு அதிசியமே! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/a-marvel-of-natures-creation-a-unique-species-of-bird




