சென்னை, நெல்லை, கோவை உள்பட 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. 20 மாவட்டங்களில் மழை இதன் காரணமாக தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், நாகை, தென்காசி, நெல்லை, கோவை ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-till-10-pm-in-20-districts




