லண்டன், டென்னிஸ் உலகில் மிகவும் கவுரவமிக்க கிராண்ட்ஸ்டால் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில், லண்டனில் 12ம் தேதி நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து), ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து) ஜோடி மார்செலோ அரேவாலோ (எல் சால்வடார்), மேட் பாவிக் (குரோஷ்யா) ஜோடியை எதிர்கொண்டது. ஹென்றி - ஹாரி சாம்பியன் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 7–6(4), 7–6(3) என்ற செட் கணக்கில் ஹென்றி - ஹாரி ஜோடி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஹென்றி - ஹாரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இரு வீரர்களுக்கும் பெறும் 2வது விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பட்டம் இதுவாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/wimbledon-tennis-henry-patten-and-harri-heliovaara-crowned-mens-doubles-champions




