சென்னை, தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு மூக்குத்து அம்மன் திரைப்படம் வெளியாது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்றது. மூக்குத்தி அம்மன் - 2 இந்நிலையில், முக்குத்தி அம்மன் - 2 படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. மூக்குத்தி அம்மன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் முன்னணி OTT தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை தியேட்டர்களில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தியேட்டர் வெளியீட்டை நடிகை நயன்தாரா ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரமாண்டம், உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ள இப்படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை, பிரமாண்டம், பேண்டசி போன்ற அம்சங்களின் கலவையாக இப்படம் ரசிகர்களை வலுவாக சென்றடையும் என்று படத்தில் டைரக்டர் சுந்தர் சி கருதுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிலீஸ் எப்போது? அதேவேளை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை மையப்படுத்தி வரும் நவம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாத பட்சத்தில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை கருத்தில் கொண்டு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/grandly-in-the-works-nayantharas-mookuthi-amman-2-when-is-the-release




