பிந்த் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு விட்டு கூலி தொழிலாளிகள் சிலர் டிராக்டர் ஒன்றில் புறப்பட்டனர். அவர்கள் சொந்த ஊரான, உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனம் இன்று அதிகாலை 1 மணியளவில் பிந்த் மாவட்டத்தில் பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் சிம்கா கிராமம் அருகே வந்தபோது, சாலையில் கால்நடைகள் படுத்திருந்தன. விபத்து இதனால், டிராக்டர் ஓட்டுநர் அவற்றின் மீது மோதி விடாமல் இருக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் எதிர் திசையில் சென்றது. அப்போது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். தவிர, விபத்தில் 32 பேர் வரை காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/madhya-pradesh-road-accident-8-killed-32-injured




