சென்னை, பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான எல் நினோ நிகழ்வுகள் காரணமாக, இந்தியப் பகுதிகளில் பருவமழைக் காற்று பலவீனமடைந்து. வறண்ட நிலப்பரப்பும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை நுங்கம்பாக்கம், சென்னை, கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, காரைக்கால், மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி, வேலூர், நாமக்கல் மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய 15 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/temperatures-hit-the-100f-378c-mark-at-15-locations-in-tamil-nadu-today




