சென்னை, தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல் கூறி இருக்கிறார். காலமானார் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி தனது 68-வது வயதில் உடல்நலப் பிரச்சினை காரணமாக காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை ஜோர்ஜ் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல் இந்நிலையில், தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு, போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆறுதல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்த கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல்#LionelMessi — Thanthi TV (@ThanthiTV) August 12, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/ronaldo-consoles-messi-over-the-loss-of-his-father




