சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சி பேருந்து நிலையம் பகுதியில் காமராஜர், ராஜீவ் காந்தி ஆகியோரின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமுதாய மக்கள் நிறுவியுள்ளனர். கால்மேல் கால் போட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடி அமைந்திருக்கும் இந்த அம்பேத்கர் சிலையால் காமராஜர், ராஜீவ்காந்தி ஆகிய தலைவர்களை அவமரியாதை செய்யும் வகையில் இருப்பதாகச் சொல்லி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அரசுத்துறை அதிகாரிகள், அந்த அம்பேத்கர் சிலையைச் சுற்றிலும் கூடாரம் அமைத்து மக்கள் பார்வையில் இருந்து மூடி மறைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அம்பேத்கர் சிலை மூடிக் கிடந்த நிலையில், நேற்று முன்தினம் சிலர் கூடாரத்தை அகற்றி, மக்கள் பார்வைக்குத் திறந்துள்ளனர். காவல்துறை தடியடி இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர், உடனடியாக அம்பேத்கர் சிலையை மூட வலியுறுத்தியும் திறந்தவர்தள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையில் அரசுத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மீண்டும் சிலையை மூட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பட்டியல் சமுதாய மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள். கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்வர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய நடைபெற்ற வன்முறையால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/salem-individuals-unveiled-a-previously-covered-ambedkar-statue




