புதுடெல்லி, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சவுத்ரி, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். குத்துச்சண்டையில் சாதனை கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை வென்று அசத்தியது. இதன் மூலம், காமன்வெல்த் குத்துச்சண்டையில் இதுவரை இங்கிலாந்து (1934, 2018) மற்றும் கனடா (1986) ஆகியவை தலா 6 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த சாதனையை இந்தியா முறியடித்தது. இறுதிப்போட்டியில் அபார வெற்றி மகளிருக்கான 70 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட அருந்ததி சவுத்ரி, இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் சாண்டெல் ரீடை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட அருந்ததி சவுத்ரி, 5-0 என்ற புள்ளிக்கணக்கில் சாண்டெல் ரீடை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். "எனது இறுதி இலக்கு ஒலிம்பிக்" தங்கம் வென்றது குறித்து அருந்ததி சவுத்ரி கூறுகையில், "இது எனது முதல் காமன்வெல்த் போட்டி. முதல் முறையிலேயே தங்கம் வென்றது சந்தோஷமாக உள்ளது. மக்கள் அளித்த ஆதரவும் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. இந்தப் பதக்கம் எனது பயணத்தின் முதல் படி மட்டுமே. எனது இறுதி இலக்கு ஒலிம்பிக் போட்டிதான்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/cwg-gold-is-just-one-step-ultimate-goal-is-olympics-boxer-arundhati-choudhary




