சேலம், சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவார்கள். இதை தவிர உருளுதண்டம் போட்டும், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். முகூர்த்தக்கால் அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடிபெருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ஆ விஜய் தமிழன் பார்த்திபன், அறங்காவலர் குழு தலைவர் என்.சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/devotional/aadi-festival-muhurthakkal-erected-at-salem-kottai-mariamman-temple




