திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உள்ளூர் விடுமுறை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம் 6-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் நடைபெற இருக்கும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு அடுத்த மாதம் 6-ந்தேதியன்று செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு அடுத்த மாதம் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/aadi-krithigai-festival-at-tiruttani-murugan-temple-holiday-for-tiruvallur-district-on-aug-6




