சென்னை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மாணவர் தற்கொலை நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் சாய் அபிநோவ் வரை அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நெஞ்சை உலுக்குகிறது. பல்லாவரம் சாய் அபிநோவ் ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் பயிற்சி மையத்தில் சேர்ந்து மீண்டும் தேர்வெழுதத் தயாராகி வந்துள்ளார். இந்த முறையும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார். அவருடைய பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விலக்கு அளிக்க வேண்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தித் தமிழகம் ஒன்றுபட்டு குரலை வலிமையாக எழுப்ப வேண்டும். இதற்காக இனி ஒரு மாணவனின் மரணமும் நிகழக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/another-student-commits-suicide-due-to-fear-of-neet-cpim-condemns-the-central-government




