திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை மற்றும் விழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகளவில் இருக்கும். சாமி தரிசனம் இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 176 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 673 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 8 லட்சம் ஆகும். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/tirupati-temple-one-day-hundi-offering-408-crore



