மதுரை, சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. திண்டுக்கல்லைச் சேர்ந்த வக்கீல் பர்வேஷ் முஷரப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் தகுதியான மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். பட்டப்படிப்பில் எவ்வாறு சேருவது என்பதற்கான வழிகள் தெரிவதில்லை. கடந்த 2021-ம் ஆண்டு இந்த கல்வி நிறுவனத்தில், பி.எஸ். அறிவியல் தகவல் தொடர்பான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னை ஐ.ஐ.டி. இணையதளம் மூலமாக சேர்க்கை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 27.9.2026 அன்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. 4 வாரங்கள் ஆனால், இப்போதுள்ள சூழலில் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த படிப்புக்கான விண்ணப்ப தேதியை மேலும் 4 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட வேண்டும். இந்த படிப்புக்கான விவரங்களை அனைத்து மாணவர்களும் அறிவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். போதிய நடவடிக்கை இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறி அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-seeking-extension-of-application-deadline-for-bs-course-at-iit-madras




