கரூர், கரூரில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நர்சிங் கல்லூரி மாணவி கரூர் மாவட்டம் கொசூர் அருகே உள்ள தந்தரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களது மகள் முத்துலட்சுமி என்கிற ரம்யா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் முத்துலட்சுமி கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி மாணவியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நர்சிங் கல்லூரியில் இருந்து மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட கல்லூரி நிர்வாகத்தினர் முத்துலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். வழக்குப்பதிவு அப்போது மாணவியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று மாணவியின் உடல்பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/nursing-college-student-commits-suicide-by-hanging-relatives-besiege-hospital



