சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக 'ஆன் ஆர்டினரி மேன்'(AN ORDINARY MAN) என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/new-film-starring-yogi-babu-directed-by-ravi-mohan-announcement-that-a-song-will-be-released-soon




