டோக்கியோ, இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அரையிறுதியில், இந்திய அணி ஹாங்காங் அணியிடம் போராடி தோல்வியடைந்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, 10-11, 11-2, 10-11 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கடைசி செட்டில் இந்திய அணி 10-7 என்ற முன்னிலையில் இருந்தது. வெற்றிக்கு இன்னும் ஒரு புள்ளி மட்டுமே தேவைப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்று புள்ளிகளை இழந்து 10-11 என்ற கணக்கில் செட்டை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் வெற்றி கையில் இருந்த நிலையில், கடைசி சில புள்ளிகளில் ஏற்பட்ட மாற்றம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பை பறித்தது. இந்திய வீரர்கள் கடைசி வரை போராடியிருந்தாலும், வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்ததால் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடிக்கு வெண்கலம் கிடைத்தது.இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-squash-bronze-for-indian-team




