திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 'தம்பி உதயநிதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிசா, சர்க்காரியா கமிஷன் என சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார்கள். என்னுடைய மிசா கைதை உங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது. என்னுடைய மிசா வரலாற்றை அண்ணன் சிட்டி பாபு அவருடைய சிறை டைரியில் பகிர்ந்திருக்கிறார். அது காலத்துக்கும் நிற்கும். மிசா சிறைக் கொடுமைகளை விசாரிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இஸ்மாயில் கமிஷன் அமைத்தார். அதில் எல்லாம் பதிவாகியிருக்கிறது. ஸ்டாலின் படிக்கத் தெரிந்தவனாக இருந்தால் அதையெல்லாம் எடுத்து படிக்க வேண்டும். நடக்கப்போகும் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். எவ்வளவு அகம்பாவம் இருந்தால் வேறு கட்சியின் உறுப்பினர்களை விரலில் வைத்த மை காய்வதற்குள் ராஜினாமா செய்ய வைப்பார்கள். இதுதான் இவர்களின் மானங்கெட்ட மாற்றமா? சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் இடைத்தேர்தல் வரும். இப்போது ஜனநாயகம் மறைந்துவிட்டது இடைத்தேர்தல் வருகிறது.' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/i-dont-need-to-prove-my-misa-arrest-to-anyone-mk-stalin-hits-back




