நகோயா, 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதிச்சுற்றில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது. இந்திய அணியில் டி.எஸ். மனு, எம்.ஆர். போவம்மா, ஜெய் குமார், கிரண் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்திய அணி பந்தயத்தை 3 நிமிடங்கள் 16.23 வினாடிகளில் நிறைவு செய்தது. இந்தியா இடம்பெற்ற 2-வது தகுதிச்சுற்றில் சீனா முதலிடம் பிடித்தது. இந்திய அணி 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது. இறுதிப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய அணியின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இதனால் ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-india-advances-to-the-relay-final




