நாகோயா, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மாரத்தான் வீரர் சாவன் பர்வால் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான மாரத்தான் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். 42.195 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் கடந்து சாவன் பர்வால் புதிய தனிப்பட்ட சாதனையைப் பதிவு செய்தார். சாவன் பர்வாலின் இந்த வெற்றியின் மிகப்பெரிய சிறப்பு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மாரத்தான் பிரிவில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மாரத்தானில் பதக்கம் வென்றிருந்தது. அதன் பிறகு 44 ஆண்டுகளாக இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. மேலும், வெளிநாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண் வீரர் ஒருவர் மாரத்தானில் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-india-wins-marathon-medal-after-44-years




