சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் 2026-27ஆம் ஆண்டிற்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை வெளியீடு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வேளாண்மை மற்றும் பொது நிழல் நிதிநிலை அறிக்கைகள் தனியாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ஜி.ஆர்.டி விடுதியில் நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் (டி.நகர்) உள்ள ஜி.ஆர்.டி கிராண்ட் டேய்ஸ் விடுதியின் 'சதர்ன் கிரவுன்' அரங்கத்தில் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடவுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/pmks-shadow-agriculture-budget-for-2026-27-to-be-released-tomorrow




