டெல்லி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா. இவருக்கு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜே.பி.நட்டாவுக்கு சிகிச்சை இந்நிலையில், ஜே.பி.நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜே.பி.நட்டா ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/union-health-minister-jp-nadda-undergoes-angioplasty



