சென்னை, தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 3 மாவட்டங்களில் மிதமான மழையும், 16 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 16 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/districts-with-rain-chance-till-10pm-details




