சென்னை, இப்படம் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினி – நெல்சன் கூட்டணி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரவேற்பை பெற்ற பாடல்கள் இப்படம் ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன். ஒன் சன்’என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறன்றன. இசை வெளியீட்டு விழா எப்போது? இப்படம் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தேதியை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/when-will-the-audio-launch-of-the-movie-jailer-2-take-place-details-revealed




