புதுச்சேரி, புதுச்சேரி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புதுச்சேரியின் முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. சரியான முறையில் ஒத்துழைத்திருந்தால் ஆட்சியை அமைத்திருக்கலாம். ஆனால் நாம் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது கையும், விசிலும் இணைந்துள்ளது. கை இருந்தால்தான் விசில் அடிக்க முடியும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் ஒருங்கிணைந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பது போல், இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/you-can-whistle-only-if-you-have-hands-former-puducherry-chief-minister-narayanasamy




