சென்னை, 'இந்தியன் ஆயில்' நிறுவனத்தின், 10 கிலோ எடை உடைய, 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' சமையல் கியாஸ் சிலிண்டரை, பதிவு செய்த நான்கு மணி நேரத்தில், வினியோகம் செய்யும் திட்டம், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீடுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதில் இருந்து, 3 - 4 நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படுகிறது. நான்கு மணி நேரம் தமிழகத்தில் கோவை உட்பட நாடு முழுதும் முக்கிய நகரங்களில், இண்டேன் எக்ஸ்ட் ராலைட் நவ் என்ற பெயரில் புதிதாக, 10 கிலோ எடை உடைய, 'காம்போசிட்' சிலிண் டர் வினியோகத்திற்கு வந்துள்ளது. இந்த சிலிண்டர், பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள், வினியோகம் பாகம் செய்யப்படுகிறது. இதன் வினியோகம், கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டது. இந்த சிலிண்டர் தேவைப்படுவோர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். தற்போது, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் புதிய சிலிண்டர் வினியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/gas-cylinder-delivery-within-4-hours-of-registration-scheme-launched-in-chennai-too




