காலம் தாழ்த்தாமல் இனி ஆண்டுதோறும் சினிமா மற்றும் சின்ன திரை விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் இன்று தெரிவித்தார். சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, நடிகர் பிரபு, நடிகர் நாசர், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் செய்தியார்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் “தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்வது எங்கள் கடமை. அடுத்து நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். நடிப்புதான் என் தெய்வம் எனக் கூறியவர் சிவாஜி கணேசன். இன்று 99வது பிறந்தநாள். அடுத்து நூற்றாண்டு பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படும். நூற்றாண்டு விழா தொடர்பாக நடிகர் பிரபு அளித்துள்ள கோரிக்கைகளை தமிழக முதல்வருடன் ஆலோசித்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெள்ளித் திரை, சின்ன திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் கொடுக்கப்படும். அவரின் பெயரில் விரைவில் விருதுகள் வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என குறிப்பிட்டார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/annual-cinema-and-small-screen-awards-minister-rajmohan




